ராமநாதபுரம், ஆக.28 –
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம்
சிக்கல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட அலுவலர் மாரிமுத்து
தலைமை வகித்தார்.
கடலாடி வட்டார வளர்ச்சி ஆணையர் முரளிதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய ஆனந்த்
முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபூதீன் துவக்கி வைத்தார்.
முதியோர் உதவித்தொகை மகளிர் உரிமைத்தொகை வீட்டுமனை பட்டா கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கோரி சிக்கல், பனிவாசல், சொக்கானை , பேய்குளம், கொத்தங்குளம், பண்ணந்தை, கீரந்தை
ஊராட்சி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராமசுப்பு,
துணை வட்டாட்சியர்
முத்துராமலிங்கம்,
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
ரவிக்குமார்
ஊராட்சி தலைவர்கள்
கணேசன் (கொத்தங்குளம்)
முனீஸ்வரி குமார் ( சொக்கானை)
தங்கம் அழகர் சாமி
(பேய்குளம்),
ஒன்றிய கவுச்சிலர் அமாவாசி உள்பட பலர் பங்கேற்றனர்.