எட்டயபுரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் பதிவுத் துறையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள எட்டயபுரம் புதிய சார் பதிவாளர் அலுவலகக் கட்டிடத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார். துணைப்பதிவுத்துறை தலைவர் திருநெல்வேலி மண்டலம் செ. செந்தமிழ் செல்வன், மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) பாளையங்கோட்டை பொ.சண்முகசுந்தரி, எட்டயபுரம் சார்பதிவாளர் செ.இராமமூர்த்தி, எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலெட்சுமி சங்கரநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.