நாகர்கோவில் ஜனவரி 02
திருவள்ளுவர் சிலையின் 25- வது ஆண்டு வெள்ளி விழாவால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்ததோடு தமிழ் மக்கள் மனதிலும் நீங்கா இடம் பெற்று விட்டார் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் கண்ணாடி இழை பாலம் திறக்கப்பட்டது. அவ்விழாவில் அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனத்தலைவர் முத்துக்குமார், குறளகம் நிறுவனர் தமிழ்க் குழவி, தமிழறிஞர் திரவியம் மற்றும் ராதாகிருஷ்ணன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள்.
இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:-
’ மிக குறுகிய கால அவகாசத்தில் துரிதமாக கண்ணாடி இழை பாலம் அமைக்க பட்டு, அதுவும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை ஒட்டி முதலமைச்சரால் திறந்தும் வைக்கப் பட்டிருக்கிறது.
அது போன்று சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக மூன்று படகுகளையும் அறிமுக படுத்தியுள்ளார்கள். இது போக ஆண்டின் கடைசி வாரத்தை திருக்குறள் வாரமாகவும், அதனை மேம் படுத்த நல்ல திட்டங்களையும் அறிவித்துள்ளார். இத் திட்டங்கள் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது மாணவ- மாணவிகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்ததினால் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவத்தை பெற்று விட்டார்.” இவ்வாறு அவர் கூறினார்.