நாகர்கோவில் செப் 2
தென்மாவட்ட ரயில் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் வாரத்தில் ஆறு நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் இனிமேல் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த நேரத்தில் கிளம்பும், எங்கெல்லாம் நிற்கும், எவ்வளவு செலவாகும் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பும் என்பது நமக்கு தெரியும். சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20627 காலை 5:00 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பும்.
ரயில் பயணிகளின் தேவைக்காக பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பயணிகள் ரயில், லோக்கல் ட்ரெயின், எக்ஸ்பிரஸ் ரயில், அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் போன்றவற்றை எல்லாம் தாண்டி தற்போது உள்ள அதிகபட்ச வேகம் கொண்ட ரயிலாக வந்தே பாரத் இயங்கி வருகிறது. 800 கிலோமீட்டர் வரை உள்ள நகரங்களை இணைக்கும் நடுத்தர அதிவிரைவு வண்டியான இது 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு நகரங்களை இணைத்துக் கொண்டு இருக்கிறது.
அந்த வரிசையில் தற்போது சென்னை மற்றும் நாகர்கோவிலை வெறும் 8 மணி நேரத்தில் கடப்பதற்கான வந்தே பாரத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண ரயில்களில் 11 மணி நேரம் பயணிக்க வேண்டிய இந்த தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் வந்தே பாரத் மூலம் கடந்து விடலாம்.சென்னை எழும்பூர் – நாகர்கோவில் (20627 ) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நிற்கும் இறுதியாக நாகர்கோவிலை மதியம் 1.50 மணிக்கு சென்றடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பி நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எந்தெந்த இடங்களில் எத்தனை மணிக்கு நிற்கும் என்றும் தெரிந்துகொள்ளலாம்.சென்னை எழும்பூர் காலை 5.00 மணி புறப்பாடு
தாம்பரம் 5.23,
விழுப்புரம் 6.52,
திருச்சி 8.55,
திண்டுக்கல் 9.53,
மதுரை 10.38,
கோவில்பட்டி 11.35,
திருநெல்வேலி 12.30,
நாகர்கோவில் 1.50 மணி சேருமிடம்
சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கட்டணம் அதிகமாக இருக்குமோ என்று நினைத்தால் அது ஓரளவு உண்மை தான். ஆனால் மிக அதிகம் இல்லை. சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி கோச்சில் செல்வதற்கு நிகரான ரயில் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.சென்னை எழும்பூர் – தாம்பரம் சேர்கார் கட்டணம் ரூ.380, எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் உணவுக் கட்டணம் இதில் அடங்கும்.ரூ.705
சென்னை எழும்பூர் – விழுப்புரம் ரூ.545, ரூ.1055,
சென்னை எழும்பூர்- திருச்சி ரூ.955, ரூ.1790,
சென்னை எழும்பூர் – திண்டுக்கல் ரூ.1105, ரூ.2110,
சென்னை எழும்பூர் – மதுரை ரூ.1200, ரூ.2295,
சென்னை எழும்பூர் – கோவில்பட்டி ரூ. 1350, ரூ.2620,
சென்னை எழும்பூர் – நெல்லை ரூ. 1665, ரூ.3055,
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் ரூ. 1760, ரூ.3240 நீங்களும் சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லவேண்டும் என்றால் இந்த ரயிலை நிச்சயம் பயன்படுத்திக்கொள்ளலாம் . குறைந்த நேரத்தில் உங்கள் சொந்த ஊர்களை அடைய சிறந்த வாய்ப்பாக இது அமையும்