சென்னை, ஆகஸ்ட்- 18,
சென்னை ஸ்டோரி டெல்லர் குழு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ஒன்றுகூடி கதை சொல்லும் திருவிழா சென்னை அறிஞர் அண்ணா நூலகத்தில் நடைபெறவுள்ளது. 19 ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் இந்நிகழ்ச்சியில் தினமும் 2000 மாணவர்கள் கலந்து கொன்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவினை நீனா காயத்ரி ஒருங்கிணைத்து வழங்குகிறார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை மற்றும் மாநி
லத்தின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டு கதை சொல்ல வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் கலந்து கொள்கின்றன.
இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பிற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை அறிஞர் அண்ணா பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் , அம்புஜவல்லி, ரேணு நாராயணன், வாசுகி, ஸ்ரீதேவி, டாக்டர் ஷீத்தல், சொர்ணபிரியா மற்றும் பல கை சொல்லும் வல்லுநர்கள் பலர் கலந்து கொள்கன்றனர்.
சென்னை ஸ்டோரி டெல்லர் ஒருங்கிணைப்பாளர் நீனா காயத்ரி பேட்டியின் போது தெரிவித்ததாவது:-
கதை சொல்வதின் நுண்ணிய திறனையும் கதை கேட்பதின் மூலம் கண்களில் பார்த்து காட்சிகளை மூளைக்குள் பதிவதைவிட, செவிவழி கேட்டு கற்பனையாக மனதில் ஓடவிட்டு பதியப்படும் காட்சிகள் காலத்தால் மறக்கமுடியாது.
கடந்த தலைமுறைகளில் பாட்டிகள் சொல்லும் செவி வழி கதைகள் காலங்காலமாய் கூறபட்டு வந்ததின் விளைவாக மணகணக்கு செய்வதில் மிக எளிதாக இருந்தது. இப்போது செல்போன் வந்தபிறகு கணிதம் அறிவியல் படிப்பில் நாட்டம் இல்லாமல் போய்விட்டது. ஒரு சில மணி நேரங்கள் கைபேசி இல்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள் கதை சொல்வோர் நிகழ்ச்சியில் பங்கேற்பதினால் கதை சொல்லும் திறன் வளரும். குழந்தைகள் கதை கேட்பதின் மூலம் சரளமாக பேசும் திறன், கற்பதில் தெளிவு, நற்பண்பு என ஒரு சேர நல்ல மனிதர்கள் உருவாகுவார்கள். ஆகவே கதை கேட்பதை இளம் வயதிலிருந்து பழகினால் வளர் பருவங்களில் அது பலனளிக்கும்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்களும் கதை கேட்கும் ஆர்வத்திற்கு ஏற்ப வயிற்றில் வளரும் குழந்தையும் பலனை பெறும் என்றார்.