சென்னை, மாதவரம் ரவுண்டானா அருகில் வீரா தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை மாவட்ட 32 வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் எம் வெங்கடேஷ் அகில இந்திய விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் தேசிய தலைவர் சி ஹெச் கிருஷ்ணா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினர் இந்நிகழ்ச்சிக்கு எம். வசந்தகுமார் மாவட்டத் தலைவர் தலைமை வகித்தார் மாவட்டச் செயலாளர் கோயில் ராஜ் வரவேற்பு உரை ஆற்றினார் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மாவட்ட துணை தலைவர் நாராயணன் மாவட்டத் துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரராவ் சிறப்புரையாற்றியவர் ராதாகிருஷ்ணன் பழனியப்பன் ராஜகோபால் விழாவில் வாழ்த்துரை வழங்கியவர்கள் நாகேஷ் நெல்லையப்பன் சையது முகமது ராஜா, பிரபாகர் பால்ராஜ், நன்றி உரையாற்றியவர் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் இவ்விழாவில் 30 ஆண்டுகளுக்கு மேல் விநியோக தொழிலை தொடர்கின்றவர்களை கௌரவிக்கும் விதமாக அதிக மதிப்பெண் பெற்ற விநியோகஸ்தர்களின் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டது