சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் பெரியகோட்டை கிராமத்திற்கு
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கிராமப்புற ஆதிதிராவிடர் திருக்கோவில் திருப் பணிகளுக்கு ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை
மாவட்ட அறங்காவலர் வழங்கினார்.
ஆதிதிராவிடர் மக்கள் வழிபட்டு வரும் திருக்கோவில்களின் திருப்பணிகளுக்காக தலா ரூ.2 லட்சத்து ஐம்பதாயிரம் தமிழக அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் கூட்டுறவு துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின்
பேரில் மானாமதுரை அருகே உள்ள பெரியகோட்டை கிராம ஆதிதிராவிடர் சமூக மக்கள் வழிபட்டு வரும் சமயனசாமி, வினாயகர்,மந்தைக்கரூப்பனசாமி,முனியப்பன் சாமி ஆகிய நான்கு கோவில்களுக்கு தலா இரண்டரை லட்சம் மொத்தம் பத்து லட்சத்திற்கான காசோலையை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் திமுக தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் ஏஆர். ஜெயமூர்த்தி வழங்கினார்.