சென்னை, ஆகஸ்ட் 11, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 20க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றிணைந்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டன.
நிறுத்தப்பட்ட மணல்குவாரிகளை திறக்க வேண்டும், அதிக பாரம் ஏற்றும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழகம் முழுவதும் காலாவதியான சுங்கச் சாவடிகளை உடனே நீக்க வேண்டும். ஒட்டுநர்களுக்கு எதிராக ஹிட் அண்டு ரன் சட்டத்தை ரத்து செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. 7 டன் எடையுள்ள வாகனப்களை இயக்க ஒட்டுநர்களுக்கு பேட்ச் இல்லாமல் ஓட்டுவதற்கு ஒன்றிய அரிசின் அனுமதியை தமிழக அரசு நடைமுறை முறைபடுத்த வேண்டும் முதலானகோரிக்கைகள் இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.