வேலூர்_31
வேலூர் மாவட்டம், வேலூர் வேலப்பாடி அருகே வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதான விழா, 47- வார்டு மாமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் இறைவன்காடு வனதுர்கா பீடம் பிரசாத் சுவாமிகள் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.