குன்றத்தூர் அடுத்த கோவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 40 வருடங்களுக்குப் தேர் திருவிழா
சென்னை
சிறு குரு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், சட்டப்பேரவையில் தெரியப் படுத்தியதை முன்னிட்டு இந்து அறநிலையத் துறை மூலமாக ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய மரத்தேர் செய்யப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேர் இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சிகளின் தலைவர் ஆ. மனோகரன், குன்றத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தே மாதரம், கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் பா.சுதாகர், மருத்துவர் கவுன்சிலர் அன்பழகன்,
கழக நிர்வாகிகள்.
தி.க.பாஸ்கர்,
ஜனார்த்தனன், மற்றும் கல் சித்தர் அருள்,கோயில் ஆணையர் செந்தில், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் உட்பட திரளான பக்தர்களும்,
பொதுமக்களும் கலந்து கொண்டனர். வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.