மதுரை கூடல் நகர் அருகே பொதிகை நகரில் உள்ள திருப்பதி அலுவலகத்தில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை
மதுரை அமைப்பின் மூலம் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதங்களில்
தலைமை இடமாக கொண்ட கோவை மாவட்டத்தில் இந்த அமைப்பின் மூலம் 2000 பேர் மாபெரும் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி 500 பேர் உடல் உறுப்பு தானம் செய்தார்கள். இதில் மதுரையில் இருந்து பத்து பேர் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மதுரை மாவட்ட தலைவர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ்கள் வழங்கி கௌரவபடுத்தினார். மேலும் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.
2025 ஆம் ஆங்கில புத்தாண்டு விழாவை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர். மேலும் புதிய நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரை மாவட்ட செயலாளராக மணிகண்ட ராஜா, கௌரவத் தலைவர் ஜெயகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் எட்வர்ட் மற்றும் உமாசங்கர், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது ரபிக், மதுரை மாவட்ட மகளிர் அணி தலைவி புஷ்பலதா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் பாண்டீஸ்வரி, மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் சந்தியா ராணி ஆகியோரை ஒருமனதாக மதுரை மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டனர். மேலும் 2025 ஜனவரியில் நிகழ்ச்சி நடத்துவதை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மேலும் புதிய நிர்வாகிகள் சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகள் மற்றும் மனித நேயத்துடனும் நடந்து கொள்வதைப் பற்றியும் விழிப்புணர்வாக கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து
சட்டம் மேலானது, சட்டம் அறியாமை ஏற்புடையதல்ல.. என்ற கொள்கையுடன் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் இந்திய சட்டத்தை முழுமையாக தெரிந்து வைத்திருந்தால் அவனது உரிமைகளை எங்கிருந்தும் கேட்டுப் பெறலாம், நீதி, தனிமனித உரிமை மறுக்கப்படும் இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும், போராடவும் இந்த சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பு செயல்படுகிறது என்று கூட்டத்தில் எடுத்துரைத்தனர்.