எமிமாள் கமலம் நினைவு தினத்தை ஒட்டி சேலம் மாவட்டம் எம்மிகார்டன் ரிஹாபிலிடேஷன் சேரிட்டபுள் டிரஸ்ட் மனவளர்ச்சி குன்றியருக்கான கமலம் கார்னிவல்- 2024 போட்டிகள் சேலம் ரெட்டியூரில் உள்ள கமலம் மறுவாழ்வு மையத்தில் செயலர் திருமதி. ஹேமா பிரைட் தலைமையில் 26/09/2024 தொடங்கப்பட்டது. அதன் பரிசளிப்பு விழா எமிமாள் கமலம் நினைவு தினமான 01/09/2024 அன்று நடைப் பெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.ஆர். மகிழ்நன், டாக்டர்.எம். ரவிச்சந்திரன், திரு. பி.செல்வராஜ், டாக்டர். கே.கே. தனவேந்தன்,ஷெரில் பிரைட் மற்றும் திருமதி. சுஜாதாஅருண்குமார் ஆகியோர் பங்கு கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். இதில் அனைத்து தன்னார்வ நிறுவன தொண்டு மாணவ மாணவியர்கள், சிறப்பாசிரியர்கள், உதவியாளர்கள், இயன்முறை மருத்துவர்கள் மற்றும் கணினி இயக்குபவர்கள் ஆகியோருக்கான மாறுவேடம், பேச்சுப்போட்டி, நடன போட்டி,பாட்டு போட்டி,உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத்துடன் கூடிய சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைப்பாளர் இவாஞ்சலின் டோமினிக் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.