கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவிற்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்களிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
தமிழ்நாடு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் .சீமா அகர்வால் ., அவர்கள் உத்தரவின்பேரில், காவல்துறை தலைவர் .ருபேஷ் குமார் மீனா ., அவர்களின் அறிவுரையின்பேரில், கோவை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் முனைவர் .பாலாஜி சரவணன் அவர்களின் மேற்பார்வையில், சேலம் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் .வடிவேல் அவர்களின் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலர் .கீதா ராணி அவர்களுடன் இணைந்து, தனி வட்டாட்சியர் (பறக்கும் படை) .விஜயகுமார், கிருஷ்ணகிரி மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளர் .ராஜசேகரன், உதவி காவல் ஆய்வாளர்கள் .பெரியசாமி, .பெருமாள் மற்றும் காவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதில் கடந்த 2024 -ம் ஆண்டில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றவழக்குகள் தொடர்பாக உணவு பொருள் கடத்தல் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட 245 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டதில் மாநில அளவில் முதலிடமும், பொதுவிநியோக திட்ட ரேசன் அரிசி கடத்தலின் போது 176 டன் பறிமுதல் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதில் மாநில அளவில் மூன்றாம் இடமும், பொதுவிநியோக திட்ட ரேசன் அரிசிகளை கடத்திய 115 வாகனங்களை பறிமுதல் செய்து மாநிலத்தில் மூன்றாவது இடத்திலும், பொதுவிநியோக திட்ட அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தொடர் குற்றவாளிகள் 8 நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின்படி, நடவடிக்கை மேற்கொண்டதில் மாநில அளவில் மூன்றாவது இடத்திலும் சிறப்பாக பணிபுரிந்ததற்காக தமிழ்நாடு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் .சீமா அகர்வால் ., அவர்களால் கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவிற்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பாராட்டு சான்றிதழ் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும், பணிகளில் கவனம் செலுத்தி சிறப்பாக பணிபுரிய வேண்டும் என அறிவுறை வழங்கினார்.