ஈரோடு ஜன 2
திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி யால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ம் ஆண்டு வெள்ளி விழாவினை தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் மாவட்ட மைய நூலகம் மற்றும் நவீன நூலகம் இணைந்து திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.
குழல் இனிது யாழ் இனிது, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், குமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் குறளில் அதிகார வைப்பு முறையும் என்ற தலைப்பில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டியும், 6ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவியர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு வினாடி, வினா போட்டியும் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 ம், இரண்டாம் பரிசாக ரூ.3,000 மூன்றாம் பரிசாக ரூ.2,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதை ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.