தஞ்சாவூர். மார்ச் 8.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் குறும்படம் -ஆவணப்படம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
இவர்களுக்கு பல்கலைக்கழக த்தில் அயல்நாட்டு தமிழ் கல்வி துறை சார்பில் குறும்படம் ஆவணப்படும் உருவாக்க உத்திகள் அவண படங்களில் வரலாற்றை பேசுதல் குறித்த பயிலரங்கம் மார்ச் 4 தேதி தொடங்கி, தொடர்ந்து இரு நாட்கள் நடைபெற்றன
இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அமுதா ,பாரத ஜோதி ,இலங்கை சேர்ந்த எழுத்தாளர் நளினி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
இப்பயிலரங்கத்தில் பல்கலைக் கழகத்தில் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 108 மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். பிரபல ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி ,சென்னை தமிழ் ஸ்டுடியோ மற்றும் பியூர் சினிமா நிறுவனர் அருண் பயிற்சிகளை வழங்கினார் தமிழில் வெளிவந்த ஆவணங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடல் குறும்படங்களை உருவாகக்கும் உத்திமுறைகள் ஆவணப்படங்கள் வாயிலாக வரலாற்றை பதிவு செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழாவில் பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம், பங்கேற்று மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். ஆவண படங்களின் தேவை குறித்து இலங்கை பேராதனைப் பல்கலைகழகத் தமிழ்த் துறை விரிவுரையாளர். ஜெயசீலன் சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சிகள் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும், அயல் நாட்டுத்தமிழ் துறை தலைவருமான குறிஞ்சி வேந்தன் பேராசிரியர்கள் பழனிவேலு ,வெற்றிச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.