நாகர்கோவில் ஜூன் 11
இந்திய தேசிய லீக் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக குளச்சல் ஆசாத் நகர் பகுதியில் இலப்பவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் நான்கிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும் 400 மதிப்பெண் மேல் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட அமைப்பாளர் பைரோஸ் காஜா தலைமையில் நடைப்பெற்றது.
மாணவரணி மாவட்ட தலைவர் சுல்தான், மாவட்ட செயலாளர் ஆதில், மாவட்ட துணை செயலாளர் செல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
இதில் ஐ.என்.எல்.பி மாநில பொதுச்செயலாளர் இம்ரான், மாநில துணை தலைவர் சுலைமான் சேட், மாநில துணை பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, ஜி.எச்.எஸ்.. இலப்பவிளை தலைமை ஆசிரியர் ரெஜி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் வழக்கறிஞர் அப்பாஜி, நெல்லை மாவட்ட தலைவர் காதர் பாஷா, நெல்லை மாவட்ட செயலாளர் ஹிதாயத், குமரி ரசூல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்…
மேலும் இதில் ஐ.என்.எல்.பி. நிர்வாகிகள், சகோதரர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.