தஞ்சாவூர் ஜூன் 25
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் கைவினை திறன் மேம்பாடு பயிற்சி 3 மாதம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 90 பேருக்கு தலையாட்டி பொம்மைகள் தயாரித்தல், தஞ்சாவூர் ஓவியம், நெட்டி வேலைப்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியின் போது மாதத்திற்கு ரூபாய் 12,500 உதவித்தொகை வழங்கப்பட்டது. பயிற்சி நிறைவு செய்த 90 பேருக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.
இதில் தமிழ் பல்கலைக்க துணை வேந்தர் திருவள்ளுவர், சிப்போ பொது மேலாளர் பழனி வேல் முருகன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் ராஜேந்திரன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத் திட்ட மேலாளர் பாலாஜி ,தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) தியாக ராஜன், கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, சிற்பத் துறை தலைவர் லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.