நாகர்கோவில் மார்ச் 24
குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழாவும் இந்திய விடுதலை போராட்ட வீரர் மாவீரன் பகத்சிங் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் நடந்தது.இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் எஸ்.கல்யாணசுந்தரம் தோழர் கே.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..இந்திய முற்போக்குக் பேரவையின் மாநில துணைத்தலைவர் தோழர் எஸ்.சுந்தரம் மக்கள் சந்திப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார்.இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தோழியர் ஆர்.செல்வராணி, மாவட்ட குழு உறுப்பினர் தோழர் தா.மகேஷ், தோழியர் தங்கம் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் வி.அருள்குமார் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.செம்பகராமண்புதூர் தெருக்கள் வழியாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.ஆரல் பாலன் இசைக்குழு பாடகர்களின் மக்கள் இசைபாடகர்கள் புஷ்பராஜ்,வாசு,நெல்சன் ஆகியோர் மக்கள் இசை பாடல்களை சிறப்பாக பாடினர்.அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தோழர் கே.சஜேஷ் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நிறைவு செய்தார்.நடப்பு அரசியலை ஆயிரக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி சிறப்பாக நடைபெற்றது.