களியக்காவிளை, பிப், 2 –
களியக்காவிளை அரசு உயர்நிலைப் பள்ளி துவங்கி நூறு ஆண்டுகளை கடந்து பாரம்பரியத்துடனும், பழம் பெரும் புகழுடனும் சாதனைகள் படைத்துள்ளது. இந்த பள்ளி மிகச்சிறந்த பள்ளியாக விளங்குகிறது. இந்த சாதனையை கொண்டாடும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர்.விளவங்கோடு தொகுதி எம்.ஏல்.ஏ .தாரகை கத்பர்ட் நூற்றாண்டு சுடர் ஏற்றி வைத்தார். பட்டதாரி ஆசிரியை மஞ்சு வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.தாரகை கத்பர்ட், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், நூற்றாண்டு விழா குழுத் தலைவர் சிந்துகுமார், பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் லிங்கதுரை,உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியை ஸ்ரீதேவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியை ஆசிரியர்கள் பசுமதி ,சுரேஷ், சதீஷ்குமார், நிர்மலா ,அமலா, கைலேஸ்வரி, சூசன்னா, உள்ளிட்டோர் ஒருங்கிணைத்திருந்தனர். பட்டதாரி ஆசிரியை ஜெயபிரபா நன்றி கூறினார்.