குலசேகம், டிச- 17
குலசேகரத்தை அடுத்த நாகக்கோடு பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு கடையை பூட்டி சென்றுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றால் கடையை திறக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று று 16-ம் தேதி காலை கலையை திறப்பதற்காக அனீஸ் சென்றபோது, கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.
நேற்று நள்ளிரவு கடைக்குள் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் கடைக்குள் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் மேலும் கடையில் வைத்திருந்த 1 லட்சத்து 22 ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து அவர் குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் இரண்டு பேர் செல்போன் மற்றும் பணத்தை கொள்ளை அடிப்பது பதிவாகி இருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்