பொள்ளாச்சி : செப்:27
தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களுக்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து
பொள்ளாச்சி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
26 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் எம் .கே .சாந்தலிங்கம் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
பொள்ளாச்சி நகராட்சி 26 வது வார்டுக்கு உட்பட்ட காந்தி மண்டப வீதி கடைவீதி உள்ளிட்ட பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ஜெயச்சந்திரன்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை மற்றும் சிபி சக்கரவர்த்தி,திமுக பைசல் தண்டபாணி
மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியைச்சேர்ந்தவர்கள்
அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.