நாகர்கோவில் – செப் – 30,
தமிழ்நாடு அமைச்சரவையில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தி.மு.க வினர் மகிழ்ச்சியாக கொண்டாடினர் . அந்த வகையில் நேற்று கோட்டார் நாயுடு மருத்துவமனை சந்திப்பில் தி.மு.க மாநகர சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஷேக் ஹிதாயித் தலைமையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் 38 – வது மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மாநகர தலைவர் ஆனந்த் ,
மாநகர சிறுபான்மை துணை அமைப்பாளர் ஜெகதீஷ் , 26வது வார்டு வட்டக் கழக செயலாளர் இடலைசாகுல் தேர்தல் பொறுப்பாளர் சதாசிவம், மாநகர சிறுபான்மை துணை அமைப்பாளர் பணி பிச்சை, ஜார்ஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி முருக பெருமாள், மா . சபீர், சந்தோஷ், அஜய், லாகேஷ், , மற்றும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.