கொட்டாரம் நவ 28
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கொட்டாரம் பேரூர் திமுக சார்பில் கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கொட்டாரம் பேரூர் திமுக செயலாளர் வைகுண்ட பெருமாள் தலைமை வகித்தார் .அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்.
வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார் .
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துசாமி,முன்னாள் ஒன்றிய அவை தலைவர் ராஜகோபால் ,பேரூர் அவைத் தலைவர் சுப்பையா பிள்ளை,கிளைச் செயலாளர்கள் ஐயப்பன் ,குமரன் ,சந்திரசேகர் ,சுப்பிரமணிய பிள்ளை ,சிவக்குமார் ,முன்னாள் பேரூராட்சி தலைவர் யோபு,நிர்வாகிகள் ரூபன் ,மரிய அந்தோணி ,வள்ளிநாயகம் ,வேலாண்டி அரசு ,சுயம்பு உட்பட பலர் பங்கேற்றனர்