மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான வடக்கு வாசல் அருள்மிகு செல்லத்தம்மன் திருக்கோயிலில் 1434-ம் பசலி உற்சவம் 19-01-2025 ந்தேதி இரவு வாஸ்து சாந்தியுடனும், 20-01-2025-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி,
29-01-2025 முடிய திருவீதி புறப்பாடு
நடைபெற உள்ளது. மேற்படி உற்சவத்தில் 27-01-2025 தேதி அருள்மிகு செல்லத்தம்மன் பட்டாபிஷேகத்தன்று மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு எழுந்தருள உள்ளார். 28-01-2025-ந் தேதி சட்டத்தேரும், 29.01.2025 மலர்ச்சப்பரம் நடைபெறவுள்ளது என்பதை செய்தி குறிப்பில் மீனாட்சியம்மன் கோவில் இணை ஆணையர்/செயல் அலுவலர் ச.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.