காளையார்கோவில்
பிப்:16
சிவகங்கை மாவட்டம்
காளையார்கோவில் ஒன்றியத்திலுள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சார்லஸ் டார்வின் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. ஒரு மாலுமியை விட அதிக நேரம் கடலில் பயணம் செய்த விஞ்ஞானியும், உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை 60 ஆயிரம் பக்கங்களுக்கு அதிகமாக எழுதியவரும், பரிணாம வளர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் பிதாமகன் சார்லஸ் டார்வின் . இவரின் முக உருவத்தில் முகமூடி அணிந்து மாணவ , மாணவிகள் புகழாரம் செய்தனர். விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை தெய்வானை தலைமையிலும் கணினி ஆசிரியர் வித்யா முன்னிலை வகித்தார். ஆசிரியை கமலம்பாய் வரவேற்றார்.
சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி டார்வின் இயற்கை தேர்வுக் கோட்பாடு ஒவ்வொரு சூழ்நிலையிலும் இயற்கை உயிரிகளிடத்தில் அதனை நிலைநிறுத்திக்
கொள்ள பல நிர்பந்தங்களை விதித்து அந்தந்த நிலைக்குத் தன்னை தகவமைத்துக்
கொள்ளவும் இனம் அடுத்தக் கட்டத்துக்குப் பரிணமிக்கிறது என்பதை விளக்கினார். பின்னர் அவர் பேசும்போது: குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறவில்லை? தற்பொழுது ஏன் பரிணாமங்கள் நிகழ்வதில்லை? போன்ற கேள்விகள் இன்றுவரை எழுப்பப்படுகின்றன. அறிவு தளங்களிலேயே குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற கருத்தாக்கம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதுடார்வின் அப்படி என்றும் சொல்லவில்லை. மாறாக மனிதனும் குரங்கும் ஒத்த, வேறு பொது இனத்திலிருந்து தோன்றியவை என்றே குறிப்பிட்டுள்ளது. மனிதனுக்கும் மனித குரங்குக்கும் மிகத் துல்லியமான மரபு வித்தியாசமே காணப்படுகிறது. பரிணாமம் என்பது கோடிக்கணக்கான காலச் சுழற்சிக்கு இடையே நிகழ்வது. குறிப்பிட்டு நோக்கும் அளவுக்கு நிகழக் கூடியதல்ல என்கிறார் டார்வின் . இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள் , பெற்றோர்கள் , கலந்துகொண்டார்கள். முடிவில் மாணவ , மாணவிகளுக்கு அறிவியல் வினாக்கள் கேட்க புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.