நாகர்கோவில் செப் 5-
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியாக நடைபெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதனை தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதைகளில் அசம்பாவிதம் எதுவும் ஏற்ப்படாத வண்ணம் முழுமையாக கண்காணிக்கும் பொருட்டு விநாயகர் சிலை வைக்கும் இடங்கள். முக்கியமான பகுதிகள் என கண்டறியப்பட்ட இடங்கள், விநாயகர் ஊர்வலம் செல்லும் வழித்தடங்கள், மாற்று சமூகத்தினர் வசிக்கும் இடங்கள், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சிலை கரைக்கப்படும் இடங்களில் சிசிடிவி வைப்பதற்கான கணக்கெடுப்பு நேற்று தொடங்கப்பட்டது. இது சம்மந்தமாக அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்க்கொண்டுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் மூலம் ஊர்வலப் பாதை முழுவதும் காவல்துறை கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் வண்ணம் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை ஏற்ப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும். ஊர்வலம் தொடங்கும் இடத்தில் இருந்து கரைக்கும் இடம் வரை ஊர்வல நிகழ்ச்சிகள் முழுவதும் பதிவு செய்யப்படும். விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும் வகையில் அவ்வப்போது காவல்துறை கொடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.