நாகர்கோவில் – நவ – 16
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மரியராஜேந்திரன் இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் நேற்று மாலை ஆட்டோவில் சாவாரி சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் வினோத்தின் வாகனத்தை தட்டி சென்றாக கூறப்படுகிறது . இதை அவரிடம் கேட்ட வாலிபர் ஆட்டோ டிரைவர் ராஜேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அது கைகலப்பாக மாறியது மேலும் ஆட்டோ டிரைவரை வாலிபர் சரமாரியாக தாக்கினார் இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வாலிபரை சாமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.ஆட்டோ டிரைவரை வாலிபர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இதுகுறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குமரி மாவட்டத்தில் மது போதையில் சாலைகள், மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாக உள்ளது . எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களின் நலன் கருதி காவல் துறை ரோந்து பணியினை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.