நாகர்கோவில், ஜூலை – 28,
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை.
எ ஐசிசி டியூ கமிட்டி உறுப்பினர் ஜாண்சனை கொலை வெறித்தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் இருவரும் ஜாண்சன். கொடுங்காயங்களுடன் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் சிகிட்சை பெற்று வந்த போது, மருத்துவக் கல்லூரியிலேயே வேவு பார்த்து சுற்றித்திரிந்தனர். மேற்படி குற்றவாளிகள் இரணியல் காவல்நிலையத்திலேயே கம்பீரமாக உலா வந்தனர். இதுவரையிலும், ஜாண்சன் நடக்க முடியாமல் உடல்நிலை மோசமான நிலையில், மருத்துவம் பார்த்து வருகிறார்.
எ ஐகே எம் மாவட்ட பொதுச் செயலாளர் பாலைய்யாவின் இருசக்கர வாகனம் உடைக்கப்பட்டு, அவரை தாக்கிய குற்றவாளி மீது இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை.
எ ஐபி டயூ எ மாவட்ட கமிட்டி உறுப்பினர் ஹெப்சிபாயிடம் பெண் ஒருவர் 2 பவுன் நகையை வாங்கி ஏமாற்றிவிட்டு தர முடியாது என்று மிரட்டியுள்ளார். இப்பிரச்சனையை பற்றி உரிய நடவடிக்கை எடுத்திடவில்லை.
எ ஐசி டபிள்யூ எப் மாவட்ட கமிட்டி உறுப்பினர் முருகேசன், அவரது மனைவியும், அவரது வீடும், 10.02.2024-ம் தேதியன்றும் 18.07.2024-ம் தேதியன்றும். 22.07.2024- தேதியன்றும் தாக்கப்படுகிறார்கள். மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுள்ளனர். எதிரிகள் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
எ ஐபி டபிள்யூ எ ஆலன்விளை கிளைத்தலைவர் ஞானசெல்வம் சொத்தை
அபகரித்திட, நான்கு பேர்கள் தாக்குகிறார்கள், மருத்துவமனையில்
சிகிட்சை பெற்றுள்ளனர். எதிரிகள் மீது இன்று வரையிலும் எந்த வித நடவடிக்கையும் எடுத்திடவில்லை.
கக்கோட்டுத்தலை முன்னாள் ஊராட்சி தலைவரின் கணவர், 20.06.2024-ம்
தேதியன்று தாக்கப்பட்டும், பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும்
இதுவரை வழக்குகள் ஏதும் பதிவு செய்யவில்லை.
இதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ரீ தரன் என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்
இவருடன் இன்னுமொரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெண் அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர் இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு வருவதாகவும் இவர்கள் எதிர்மனுதாரர்களிடம்
விலைக்கு போய் வருகிறார்கள். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும். மேற்படி புகார்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கை
எடுத்திடுமாறு சி பி ஐ எம் எல் கட்சி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.