தஞ்சாவூர் ஜூலை 19
காவிரி பிரச்சனையில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ரயில் மறியல் போராட் டம் நடத்தினர்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை இதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்து வாஸ்கோடகாமா – வேளாங்க ண்ணி விரைவு ரயிலை சுமார் 15 நிமிடங்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலர் சாமி .நடராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பின ர் உலகநாதன் தலைமை வகித்த னர். சங்க நிர்வாகிகள் ராமச்சந்திர .ன், என்.வி. கண்ணன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலர் முத்து. உத்திராபதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பக்கிரி சாமி, சுரேஷ்குமார், தமிழ்ச்செல்வி, கலைச்செல்வன், சரவணன் ,விடுதலை சிறுத்தைக ள் மைய மாவட்ட செயலர் ஜெய்ச ங்கர் , ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் சேவையா ,செயலர் துரை. மதிவா ணன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர் .இது தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டனர்.