அரியலூர்,ஜன;17
அரியலூர் மாவட்டம் செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் தை 2 ஆம் நாள் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பால் சொசைட்டியில் செயலாளர் கொளஞ்சிநாதன் தலைமையில், பால்வெண்டர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் இட்டு பொங்கல் பால் பானை பொங்கி வரும் சூழலில் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று கோஷம் எழுப்பிய படி படையல் இட்டு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் பால் பண்ணை செயலாளர் வழங்கினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்