தாம்பரம் மாநகராட்சியில் மாடுகள் சாலையில் சுற்றி திரியாமல் இருக்க மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும் என தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை பிடித்து கழகட்டூர் பகுதியில் கொண்டு சென்று சரியான முறையில் பராமரிக்காமல் மாடுகள் இருப்பதால் மாடுகள் பாதிக்கபடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தாம்பரம் மாநகரில் சாலைகளில் திரியும் மாநாடுகளை அதிகாரிகள் பிடித்தால் தாம்பரம் பகுதியிலேயே கோசாலை அமைத்து மாடுகளை பராமரிக்க வேண்டும் எனவும் கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையில் மாடுகள் சுற்றி தெரியாமல் இருக்க பெருநகர சென்னை மாநகராட்சியில் நவீன மாட்டுத் தொழுவம் ஏற்படுத்தி கொடுத்தது போல் தாம்பரம் மாநகராட்சியில் அந்தந்த பகுதியில் உள்ள கால்நடைகளை கணக்கெடுத்து அந்தந்த பகுதியிலேயே நவீன மாட்டுத் தொழுவம் அமைத்து தர வேண்டும் என்றும் மேச்சல் நிலங்களை கால்நடைகளுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையரை தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் முனைவர் தங்க சாந்தகுமார் தலைமையில் கால்நடை விவசாயிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது சங்கத்தின் பொதுச் செயலாளர் திருநின்றவூர் தீன தயாளன், மாநில பொருளாளர் திருநீர்மலை கார்த்திக், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் தாம்பரம் வெங்கடேசன், துணைச் செயலாளர் தனபால், தாம்பரம் பொருளாளர் லோகேஷ், செயலாளர் சரவணன், தலைவர் புண்ணியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செல்வம், வரதராஜன், ராபட் கமலக்கண்ணன், லட்சுமிபதி, ரவிக்குமார். சாய் மகேஷ். ஜெயராமன். ரவிக்குமார் மற்றும் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் ராஜு ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் முனைவர் தங்க சாந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துளார். நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் அடுத்தகட்டமாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.