மதுரை ஜூலை 5,
மதுரை மாநகர் கூடல் புதூர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவுப் பிரிவை சேர்ந்த சார்பு ஆய்வாளர் முத்துராமன், தலைமை காவலர் சுமன், கூடல் புதூர் காவல் நிலையத்தைத் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்
வேல்முருகன், சிக்கந்தர், பிரேம்குமார் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் நேரில் அழைத்து
தனது வாழ்த்துக்களை கூறி பண வெகுமதியும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.