புதுக்கடை, ஏப்- 13
புதுக்கடை அருகே தேங்கா பட்டணம் பகுதியை சேர்ந்தவர் சபாகர் மகன் முகம்மது ஆசிப் (14). இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நஜீமுதின் (46). இவர் வெளிநாட்டில் வியாபாரம் செய்து வருகிறார். தற்போது ஊரில் உள்ளார். கடந்த 3 வாரங்கள் முன்பு முகமது ஆசிப் சகோதரர் நபிஸ் (15) என்ற 10-ம் வகுப்பு மாணவனை நிஜி முதின் தாக்கியதாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தோப்பு தெளகித் பள்ளிவாசல் அருகில் முகம்மது ஆசிப் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நிஜிமுதின் ஆசிப்பை கெட்ட வார்த்தைகள் பேசி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த முகம்மது ஆசிப் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.