நித்திரவிளை , ஜன- 28
நித்திரவிளை அருகே காவிரிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (74). இவரது மகன் கனகராஜ் (55). டாஸ்மாக் ஊழியராக உள்ளார். சம்பவ தினம் இரவு தங்கமணி மகனிடம் சாப்பிட பணம் கேட்டுள்ளார். அப்போது கனகராஜ் தகாத வார்த்தைகள் பேசி கையால் தந்தையை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த தங்கமணி குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.