நாகர்கோவில் ஜூலை 15,
குமரி மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த சில நாட்களாக அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் குறிப்பாக வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவாதனம் உத்தரவின் பேரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் .நேற்று வாகன சோதனை போது கன்னியாகுமரி, நாகர்கோவில் , தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது நாகர்கோவில் நகரிலும் போக்குவரத்து போலீசார் வடசேரி, செட்டிகுளம், பார்வதிபுரம் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது அப்போது குடிபோதையில் வாகன ஓட்டிய சிலர் சிக்கினார்கள் அவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 18 வயதுக்கு குறைவாக வாகனம் ஓட்டி வந்த இரண்டு பேரும் வாகன சோதனை சிக்கினார்கள் அவர்களது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம் விதித்தனார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தலைக்கவசம் மற்றும் சாலை விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது கன்னியாகுமரி மார்த்தாண்டம் குளித்துறை, இரணியல், தக்கலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஒரே நாளில் குடிபோதையில் வாகன ஓட்டியதாக 37 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இவர்களுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 18 வயதுக்கு கீழ் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக நாலு பேரின் பெற்றோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஹெல்மெட் மற்றும் உரிய ஆவணங்களின்றி வாகன ஓட்டியதாக 1434 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.