கோவை ஜன:14
கோவை மாவட்டம் சுங்கம் பகுதி கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆம் ஆண்டு வைரவிழா பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்டு மலர் முதல் பதிப்பை வெளியிட பள்ளி முதல்வர் ஆரோக்கிய ததேயுஸ் பெற்றுக்கொண்டார்.
உடன் முன்னாள் மாணவர் சங்க செயலர் ராஜ்குமார், முன்னாள் மாணவர் சங்க தலைவர் நந்தகுமார், முதன்மை குரு ஜான் ஜோசப், மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ். முன்னாள் ஆசிரியர்கள் பிரான்ஸ் ஜோ. தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் மாணவ மாணவியர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களையும் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கங் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் நந்தகுமார், செயலாளர் ராஜ்குமார், தாளாளர் மற்றும் முதல்வர் ஆரோக் கிய ததேயுஸ் முன்னாள் ஆசிரியர் ஜோ தன்ராஜ் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.