திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு கிரியம்பட்டி அருகே உள்ள ஸ்ரீவி கல்லூரியில் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவானது ஸ்ரீவீ கல்லூரியின் தலைவர் எஸ்.எஸ். சுதந்திரம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் கல்லூரியின் செயலாளர் கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ஸ்ரீவீ கல்லூரியில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கு தொழில் வழிகாட்டுதல் திட்டம், இந்திய விமானப்படை அக்னி வீர் வாய்வு-2025 வேலை வாய்ப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நடைபெற்ற பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை தாம்பரம் சென்னை விமானப்படை அதிகாரி கார்போரல் அருண்குமார் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கேட்ட போது சரியான விடை கூறியவர்களுக்கு செஞ்சிலுவை சங்க தலைவர் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மைய அலுவலர் A.ராப்சன் டேவிட் , கல்லூரி துணை இயக்குனர் Dr.வில்சன்,
சென்னை தாம்பரம் விமானப்படை அதிகாரி அமித் ஜாதவ், கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் சுரேஷ் ராஜ், பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியை சி.ரம்யா
நன்றி கூறினார்.