மதுரை ஆகஸ்ட் 11,
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமையிலும், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையில் அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா, கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார், இந்நிகழ்வில் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரிய புல்லான் என்ற செல்வம், கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணிகள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,