நாகர்கோவில் – செப்- 30,
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் கீழதத்தியார்குளம் பகுதியில் வசித்து வருபவர் அசோக் குமார் (42) , இவர் தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடன் பெற்று சொந்தமாக சொகுசு கார் ஒன்றினை ஒழுகினசேரி அருகே உள்ள திரவியம் எலும்பு முறிவு மருத்துவ மனை அருகே பி. எம்.எஸ் (தொழிற்சங்கம் ) மூலம் இயங்கும் வாடகை கார் மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாகனம் ஒட்டி வருகிறார். தன்னுடைய கடின உழைப்பின் மூலம் சொந்தமாக சொகுசு கார் ஒன்றினை வாங்கி வாடகைக்கு ஒட்டி வந்த நிலையில் தொழில் போட்டி காரணமாக அதே பகுதியினை சேர்ந்த ஒட்டுனர்களுக்கும் அசோக்குமாருக்கும் ஏற்க்கனவே முன்விரோதம் இருந்த நிலையில் 29. 09.2024 இரவு தன்னுடைய பனியினை முடித்து விட்டு வாகன நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்க்கு சென்று மீண்டும் மறு நாள் (ஞாயிறு) நேற்று காலை வந்து வாகனத்தை பார்க்கும் போது வாகனத்தின் பின்னால் உள்ள கண்ணாடியில் கருங் கற்க்களை தூக்கி எறிந்து மர்ம நபர்கள் சேதப்படுத்தியது கண்டு அதிர்ச்சி அடைந்து . வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . மர்ம நபர்கள் குறித்து வடசேரி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை மேற்க்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.