மதுரை செப்டம்பர் 3,
மதுரை மாநகராட்சி வருவாய் உதவியாளர்களின் பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து
மதுரை மாநகராட்சி 5 மண்டலங்களுக்குள்பட்ட 100 வார்டுகள் உள்ளன. இவற்றுள் உள் வணிக வளாகக் கட்டடங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் வரியை வசூல் செய்வதற்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் வருவாய் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், வணிக வளாகங்கள், ஒரு சில வீடுகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டதைவிட, குறைவான வரியை அலுவலர்கள் வசூலிப்பதாக கடந்த சில மாதங்களாக புகார் எழுந்தது. இதனையடுத்து வரி வசூல் பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுவை அமைத்தார். இதில், சில வணிக வளாகங்கள், வீடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவான வரி வசூல் செய்து, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. குறைவான வரி வசூல் செய்து, முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 மண்டலங்களிலும் வரி வசூல் செய்த வருவாய் உதவியாளர்களை பணியிடை நீக்கம் செய்தார். இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளர்கள் 5 பேரும் வரி வசூல் மோசடிக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என ஆணையர் நியமித்த குழு முன் முன்னிலையாகி விளக்கமளித்தனர். மேலும், வருவாய் உதவியாளர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆணையர் ச.தினேஷ்குமார் வருவாய் உதவியாளர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தார்