கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்குவது கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் திருக்கோவிலாகும் இங்கு அனுதினமும் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இதன்படி கோவில் வளாகத்தில் கருவறை முன்பு காலணிகளை கழற்றி விடுவதால் ஆன்மீக பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், செயல் அலுவலர் அவர்கள் உடனடியாக கவனம் செலுத்தி கோவில் வாசலுக்கு முன்பு காலணிகள் பாதுகாப்பு அறை வைக்க வழி வகுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆன்மீக அன்பர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கோவில் வளாகத்திற்குள் மது பிரியர்கள் மற்றும் ஒரு சில நபர்கள் அறியாமை கைலி வேஷ்டிகளை அணிந்து கோவிலில் உட்காருவதால் கோவிலின் புனித தன்மை சீர்கேடாக உள்ளது என கூறுகின்றனர்.எனவே கோவில் வளாகத்திற்குள் கைலி அணிந்து வரக்கூடாது என துண்டு பிரசுரம், மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.