பூதப்பாண்டி – நவ- 14-
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்ச குளத்திலுருந்து விஷ்ணுபுரம் வழியாக பார்வதிபுரம் செல்லும் சாலையோரம் நிற்க்கும் மின் கம்பத்தின் மேல் பகுதி உடைந்து எந்நேரம் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் அந்த வழியாக வாகனத்தில் செல்பவருக்கும் ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. மேலும் இந்த சாலை வழியாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் சென்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது. எனவே வருமுன் காப்போம் என மின்வாரிய அதிகாரிகள் அந்த ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரி வருகிறார்கள்