இராமநாதரம் அக 06-
நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக.,வின் அவதூறு பிரசாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரத்தில் மாவட்ட காங் சார்பில் பிரசார நடைபயணம், நேற்று முந்தினம் நடந்தது. கருமாணிக்கம்
எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் வரவேற்றார்.
மாநில துணைத்தலைவர் இதயத்துல்லா,
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் செல்லத்துரை அப்துல்லா,
தேசிய மீனவர் காங் தலைவர் ஆம்ஸ்ட்ராங்
பேசினர். மாநில செயலாளர் ஆனந்த குமார், நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன், மாவட்ட மகளிர் காங் தலைவர் ராமலட்சுமி, வட்டாரத்தலைவர்கள் சேகர், சேதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.