அஞ்சுகிராமம் டிச-12
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் சார்பில் இறச்சகுளம் அருள்ஞானபுரத்தில் சட்ட மாமேதை, அண்ணல் அம்பேத்கர் 9 அடி வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழாவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அவரது சென்னை முகாம் அலுவலகத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தினகரன் சந்தித்தார்.மேலும் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்தார்.உடன் மாநில செயலாளர் ராமதாஸ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாசு ஆனந்த் மவுரியா, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவண கார்த்திகேயன், மாநில இளைஞரணி செயலாளர் சார்லஸ் தனபாலன், குமரி மாவட்ட துணைச் செயலாளர் முருகன், மாநில மகளிரணி துணை செயலாளர் சித்ரா மற்றும் அஇஅதிமுக தோவாளை ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.