[3:50 pm, 11/12/2024] +91 96777 06646: ஊட்டி. டிச.12.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் மலைகாய்கறி உற்பத்தியும் அதிகமாக நடக்கிறது. பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், புரூக்கோலி, சிவப்பு கோஸ், இலைக்கோஸ் கொண்ட முட்டைக்கோஸ் இன பயிர்கள் அறுவடை காலமாகும். தொடர் மழையும், உறைபன, நீர்பனி போன்ற மாறி மாறி வரும் காலநிலையால் விவசாய உற்பத்தி செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது அதனால் எல்லா சீசனிலும் முட்டைக்கோஸ் பயிருக்கு நிலையான விலை இருப்பதில்லை மூன்று மாத காலபயிரான முட்டைக்கோஸ் உற்பத்திக்கு பெரும் பராமரிப்பும் தேவைப்படாது ஆனால் அறுவடை கால எல்லைக்குள் எடுக்கா விட்டால் முற்றிய நிலையில் வெடித்து விடும் அல்லது அதிகமான ஈரப்பதம் மற்றும் அஸ்வினி நோயால் அழுகல் ஏற்பட்டு விற்பனை செய்வதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
[3:51 pm, 11/12/2024] +91 96777 06646: கோத்தகிரி, மிளிதேன், பேரகணி, கூக்கல்துறை, தொட்டணி, கட்டபெட்டு பகுதிகளில் தற்போது முட்டைகோஸ் அறுவடை பணி தொடங்கியுள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் ஏல முறையில் விற்பனையாகும் முட்டைகோஸ் ஒரு கிலோ 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. உள்ளூர் மற்றும் வெளி மார்க்கெட் கடைகளில் 40 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. தற்போது மழை தொடங்கும் முன் முட்டைகோஸ் அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தோட்டங்களில் விளையும் முட்டைகோசை விவசாயிகள் மேட்டுப்பாளையம், ஊட்டி காய்கறி மண்டிகளிலும் சிலர் உழவர் சந்தைகளிலும் விற்பனை செய்து வருகின்றனர்.