எடப்பாடியாரை அவதூறாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை எரித்து போராட்டம்
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன் தலைமை வகித்தார்
ராமநாதபுரம், ஆக.28
அதிமுக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி ஆலோசனையின்படி
மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் மற்றும் இராமநாதபுரம் நகர் கழகம் சார்பில்
மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன் தலைமையில்
இராமநாதபுரம் நகர் கழக செயலாளர பால்பாண்டியன்
,மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சை கண்டித்து கண்டா போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் பாரதி நகர் பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
இதில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்ஜெயபால், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இராஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் மொட்டையன் வலசை கோபால், ஜெயகார்த்திகேயன்மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கருணாகரன் மோகன்பாபு இராமமூர்த்தி, மாணவரணி வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து கோஷங்கள் எழுப்பினர். ஒரு கட்டத்தில் திடீரென உண்ணாமலை உருவ பொம்மை எரித்து ஆவேசமாக கோஷமிட்டனர்.