வேலூர்=22
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் காளியம்மன் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற காளை விடும் திருவிழா கிராம நாட்டாண்மை சண்முகம் தலைமையிலும் துணை நாட்டாண்மை ரவி இராணுவம் பணி ஓய்வு வண்டரந்தாங்கல்
ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.ராகேஷ் முன்னிலையிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது . காளை விடும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர்கள் சார்பில் பரிசுகள் வழங்கினர் இதில் திரளானோர் கலந்து கொண்டனர்