வேலூர் 30
வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு வட்டம், அத்தியூர் கிராமத்தில் தைத்திருநாள் பொங்கல் விழாவினையொட்டியும் ,தை அமாவாசை முன்னிட்டும் நடைபெற்ற காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களில் இருந்தும் காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் சரி பாயந்து ஓடியது இதில் பார்வையாளர்கள், கத்தி கூச்சலிட்டு ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர் .விழா ஏற்பாட்டினை ஊர் நாட்டான்மை, மேட்டுக்குடி ,விழா குழுவினர்கள் ,ஊர் பொதுமக்கள் ,ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திரளான காளைகளும், காளைகளின் உரிமையாளர்களும், பொதுமக்களும், பலர் கலந்து கொண்டனர் .