*கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், வீரோஜிபள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில்
200 எருதுகள் பங்கேற்பு.
குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த காளைகளுக்கு பரிசு தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள்
வழங்கப்பட்டது.*
………………………………………
கிருஷ்ணகிரி மார் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் பொங்கல் பண்டிகை மற்றும் திருவிழாக்கள் முன்னிட்டு
எருது விடும் திருவிழா தொடர்ந்து ஐந்தாம் வருடமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில்
கிருஷ்ணகிரி அருகே உள்ள வீரோஜிபள்ளி கிராமத்தில் கோவில் திருவிழா
முன்னிட்டு நடைபெற்ற எருதுவிடும் திருவிழா நடைப்பெற்றது. இந்த எருது விடும் விழாவில்
குப்பம், பர்கூர், மத்தூர், வேப்பனப்பள்ளி, வரட்டனப்பள்ளி, கந்திகுப்பம்,திருப்பத்தூர், என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து
200 மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வேப்பனப்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் கொடியசைத்து இந்த விழாவை துவக்கி வைத்தார்.
அரசின் வழிக்காட்டுதலின் படி நடத்தப்பட்ட இந்த எருதுவிடும் விழாவில் கலந்துக்
கொண்ட அனைத்து காளைகளும் வாடி வாசலுக்கு
கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஒவ்வெரு காளைகளாக
அவிழ்த்து விடப்பட்டது.
இதில் குறிப்பிட்ட தூரத்தை
மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது.
இந்த எருதுவிடும் விழாவினை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி, ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினார்கள்.
இந்த எருதுவிடும் விழாவினை வீரோஜிபள்ளி ஊர் கவுண்டர்கள், ஊர்பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
முதல் மூன்று பரிசு பெற்ற காளைகளான, ஜோலார்பேட்டை யாழினி முதல் பரிசையும், கெட்டூர் மச்சக்கன்னி இரண்டாம் பரிசையும், டாட்டா பிர்லா என்ற காளை மூன்றாம் பரிசையும் தட்டி சென்றது.
வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics