திருப்பத்தூர்: டிச:11, திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு காவல் நிலையத்தை ஒட்டி செல்லும் சாலை சரிவர இல்லை எனவும், பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சென்றுவர மேம்பாலம் வாக்குறுதியின் அடிப்படையில் அமைத்து தரவில்லை எனவும் சாலை மறியலில் ஊர் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட குரிசலாப்பட்டு பகுதியில் தளுகன வட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை ஒட்டி செல்லும் சாலையில் தினமும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த வழியை பயன்படுத்தி தான் செல்ல வேண்டும். இந்த பகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழையால் பள்ளி மாணவ மாணவிகள் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தேர்தல் வாக்குறுதியின் போது பாலம் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். இது நாள் வரை பாலமும் அமைத்து தரவில்லை சரியான சாலை வசதியும் அமைத்து தரவில்லை என பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவி மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் புறக்கணித்து சாலையில் அமர்ந்து அமைதி வழியில் போராட்டம் நடத்த முற்பட்டனர். தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நெடுஞ்சாலைத்துறையினர் நேரடியாக பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் அனுப்பப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் மாணவ மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 50க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கே பல மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.